உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 25 ஆண்டு சிறை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 25 ஆண்டு சிறை

தேனி : மனநலம் பாதித்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூடலுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்னக்கொடி 45,க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.கூடலுார் பகுதியை சேர்ந்த மனநலம் பாதித்த சிறுவனை பெற்றோர் பராமரித்து வந்தனர். அன்னக்கொடி சிறுவனுக்கு தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுவனின் பெற்றோர் கூடலுார் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு விசாரணை தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் அன்னக்கொடிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ரசீதா ஆஜரானார். அபராத தொகை கட்ட தவறினால், மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அபராத தொகையுடன் சேர்த்து ரூ.7 லட்சம் இழப்பீடாக சிறுவனுக்கு அரசு வழங்க வேண்டும். இதில் ரூ.75 ஆயிரத்தை சிறுவன் பராமரிப்பிற்கும், ரூ.6 லட்சத்தை வங்கியில் சிறுவன் பெயரில் டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ