உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் தலைமறைவு

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் தலைமறைவு

மூணாறு : மூணாறு அருகே வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஏலத் தோட்ட தொழிலாளி தலைமறைவானார்.மூணாறு அருகே கடலார் எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான ஏலத்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி மனோ 42. இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில் கடலார் எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் தனியாக இருந்த 20 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சம்பந்தப்பட்ட பெண் பலமாக கூச்சலிட்டதால் தப்பி ஓடியவர் தலைமறைவானார். மூணாறு போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். தலைமறைவான மனோவை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ