மேலும் செய்திகள்
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
03-Oct-2025
தேனி: மனநல விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சர்வதேச அரிமா சங்கம் சார்பில் அனைத்து அரிமா சங்கங்களும் இணைந்து நடத்திய மாரத்தான் ஊர்வலத்தை சினேஹாபிரியா எஸ்.பி., துவக்கி வைத்தார். அரிமா தலைவர் பாண்டியராஜன், மாவட்ட ஆளுநர் செல்வம், மண்டலத் தலைவர் ஜெகதீஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், பசி நிவாரண மாவட்டத் தலைவர் பெஸ்ட் ரவி, யாஹீ வட்டார தலைவர்கள் ராஜேஸ்கண்ணா, முகமதுசேக் இப்ராஹிம், சத்தியமூர்த்தி, ஆனந்தராஜ், கவிதாலயா சரவணன், முருகேசன், பகுதி ஆலோசகர் செல்வகணேசன், மண்டல தலைவர் ராஜ்மோகன், நிர்வாகிகள் முத்துசெந்தில்குமார், குலோத்துங்கன், நவநீதன், வைகை அரிமா சங்கத் தலைவர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் பங்களாமேட்டில் துவங்கி நேருசிலை வழியாக பெரியகுளம் ரோடு ஸ்டேட் வங்கி எதிரில் நிறைவடைந்தது. பள்ளிக்கல்லுாரி மாணவ மாணவியர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.---
03-Oct-2025