மேலும் செய்திகள்
புளு ஸ்டார் ஆங்கில பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
11-May-2025
உத்தமபாளையம்; பிளஸ் 2 பொதுத் தேர்வில் உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தும், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவன் யதேஷ்பாண்டி 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி அபூர்வா ஸ்ரீ 576 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், மாணவன் பாலமுருகன் 573 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்றனர். 580 க்கு மேல் ஒருவரும், 570 க்கு மேல் 4 பேர்களும், 550 க்கு மேல் 12 பேர்களும், 500 க்கு மேல் 43 பேர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். உயிரியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் பாடப் பிரிவுகளில் தலா ஒருவர் 'சென்டம்' எடுத்தனர்.சாதனை படைத்த மாணவ மாணவிகளை விகாசா பள்ளிகளின் சேர்மன் இந்திரா, நிர்வாகக் குழு செயலர் உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.
11-May-2025