உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒக்கரைப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., சீட்

ஒக்கரைப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., சீட்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ரோசனபட்டியைச் சேர்ந்த மாணவி மோகனப்பிரியா கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 524 மதிப்பெண், நீட் தேர்வில் 455 மதிப்பெண் பெற்றார். இதே பள்ளியில் படித்த எரதிமக்காள்பட்டியைச் சேர்ந்த மாணவி மதுமித்ரா பிளஸ் 2 தேர்வில் 532 மதிப்பெண், நீட் தேர்வில் 433 மதிப்பெண் பெற்றார். கவுன்சிலிங்கில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மாணவி மோகனப்பிரியாவுக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவி மதுமித்ராவுக்கு திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரியிலும் சீட் கிடைத்துள்ளது. தலைமை ஆசிரியர் செந்தில், மேலாண்மை குழு தலைவர் ஜெயஸ்ரீ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ