மாவட்ட கிரிக்கெட் போட்டி மேனகா மில் அணி வெற்றி
தேனி : தேனி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சார்பில் ஏ டிவிஷன் போட்டிகள் நடந்து வருகிறது. போட்டிகள் தேனி, சின்னமனுார், பெரியகுளம் பகுதிகளில் நடந்துவருகிறது. தேனியில் நடந்த போட்டியில் மேனகா மில்ஸ் கிரிக்கெட் கிளப், எவர்கிரீன் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேனகா மில்ஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. வீரர்கள் வெங்கடேஷ் 82 ரன்கள், அதித்சம்ராஜ் 66 ரன்கள் எடுத்தனர். எவர்கிரீன் அணி கீர்த்திவாசன் 5 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த எவர்கிரீன் அணி 27.4 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேனகா மில்ஸ் அணி வெற்றி பெற்றது.