மேலும் செய்திகள்
காட்டிநாயனப்பள்ளி அரசு பள்ளி ஆண்டு விழா
10-Feb-2025
தேனி : பெரியகுளம் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி தங்கராஜ் தலைமையில் நடந்தது. பி.இ.ஓ., சரஸ்வதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை தமிழ்செல்வி வரவேற்றார். ஆசிரியை இந்துமதி ஆண்டறிக்கை வாசித்தார். கூடுதல் திட்ட அலுவலர் மோகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன், பாண்டிச்செல்வி,பயிற்றுனர் பாண்டிச்செல்வி பேசினர். ஆசிரியர் நாகராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியை ஞானதெரஸ் தொகுத்து வழங்கினார். கலைத்திருவிழா போட்டியில் தனிநபர் நடிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி மோகவர்ஷினியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டன. வடபுதுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் அன்னப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வானவில் மன்ற மாவட்ட போட்டியின் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் விஷ்ணுபாண்டியன், தரணிச் செல்வன், மோகவர்ஷினி, கலைத்திருவிழா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
10-Feb-2025