உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அனுமதித்த 29 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க... மறுப்பு: இலவச பஸ் சேவையால் வருவாய் பாதிப்பு என புலம்பல்

அனுமதித்த 29 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க... மறுப்பு: இலவச பஸ் சேவையால் வருவாய் பாதிப்பு என புலம்பல்

தேனி: தேனி மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட 29 மினிபஸ் வழித்தடங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், உரிமையாளர்கள் மினி பஸ்களை இயக்க முன்வரவில்லை. இதனால் மாணவர்கள், பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தமிழ்நாடு அரசின் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தில் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட வழித்தடங்களில் இயங்கி கொண்டிருந்த மினி பஸ்கள் தொடர்ந்து இயங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் மாவட்டத்தில் 30 புதிய வழித்தடங்களில் 12 கி.மீ., முதல் 14 கி.மீ., வரை கூடுதலாக இயக்க செயல்முறை ஆணை வழங்கப்பட்டன. ஆனால் அனுமதி வழங்கியபடி மினி பஸ்கள் பல வழித்தடங்களில் இயக்க வில்லை. இது பற்றி மினிபஸ் உரிமையாளர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர்.இந்நிலையில் ஆண்டிபட்டி டூ முத்தனம்பட்டி உள்பட 3 வழித்தடங்களில் 9 மினிபஸ்கள் இயக்க புதிய சேவைகளாக துணை முதல்வர் உதயநிதி ஜூன் 16ல் தேனியில் துவக்கி வைத்தார். இந்த வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நேரப்படி இயக்காமல் சேவையை குறைத்து இயக்குவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். 29 வழித்தடங்களில் இயங்காத மினி பஸ்கள்:இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட 30 புதிய வழித்தடங்களில் 29 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க வில்லை. இதற்கு காரணம் அரசின் விடியல் பயண திட்டத்தில் பெண்களுக்காக இலவச சேவை மினி பஸ்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது என மினி பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் 29 வழித்தடங்களில் மினிபஸ் சேவை பாதிக்கப்பட்டு, பொது மக்கள், மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இச் சூழ்நிலையால் மாவட்டத்தில் உள்ள 32 சதவீத கிராமப் பகுதிகள் போக்குவரத்து இன்றி முடங்கியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்கலெக்டர் மினி பஸ் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி