மேலும் செய்திகள்
மகன் காதல் திருமணம் தாய் தற்கொலை
09-Sep-2024
தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி போயமார் தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 41. இவரது மனைவி சுந்தரி, 27. இந்த தம்பதிக்கு 10, 8 வயதில் மகன்கள் உள்ளனர். நாகேந்திரன் டம்டம் பாறை அருகே டீக்கடையில் வேலை செய்கிறார். கடந்த 1ம் தேதி, நாகேந்திரன் தன் மகன்களுக்கு காதணி விழா நடத்தினார். இதில் மொய் பணமாக 2.30 லட்சம் வசூலானது. அந்தப் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்யுமாறு சுந்தரியிடம் நாகேந்திரன் கொடுத்தார்.ஆனால், மொய் பணம் மற்றும் இரு மகன்களுடன் சுந்தரி மாயமானார். தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடுகின்றனர்.--
09-Sep-2024