நாகலாபுரம் பாரதி வித்யா மந்திர் பள்ளி சாதனை
தேனி: தேனி நாகலாபுரம் பாரதி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப்பொதுத்தேர்வுகளில் பல்வேறு சாதனைகள் படைத்தனர்.பத்தாம் வகுப்பு மாணவி ஷர்ஷினி 500க்கு 494 மதிப்பெண்கள் எடுத்தார். ஆங்கிலத்தில் ஒருவர், அறிவியலில் 12 பேர், சமூக அறிவியலில் 13 பேர் நுாறு மதிப்பெண் எடுத்தனர். 480க்கு மேல் 7 பேர், 450க்கு மேல் 31 பேர், 425 பேருக்கு மேல் 47 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவி கீர்த்திபாலா 600க்கு 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். வேதியலில் 3 பேர், கணிப்பொறி அறிவியலில் 5 பேர் நுாறு மதிப்பெண் எடுத்தனர். 575க்கு மேல் 4 பேர், 550க்கு மேல் 12 பேர், 500க்கு மேல் 38 மாணவர்கள் மதிப்பெண் எடுத்துள்ளனர். பிளஸ் 1 தேர்வில் மாணவர் நவீன் 600க்கு 585 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பொருளியல் பாடத்தில் ஒருவர், கணினிப்பயன்பாடுகள் பாடத்தில் 3 பேர் நுாறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 25 மாணவர்கள் 525 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். சாதனை புரிந்த மாணவர்களை பள்ளியின் நிறுவனத் தலைவர் ராஜகோபால் பாராட்டினார்.