உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சத்துணவு பணியாளர்கள் மறியல்

 சத்துணவு பணியாளர்கள் மறியல்

தேனி: தேனியில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் 2வது நாளாக நடத்திய ரோடு மறியலில் 710 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கம்பம்-தேனி ரோட்டில் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தேன்மொழி, தங்கமீனா, சுமதி, அன்பழகன், தெய்வேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஆசிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்கள் 13 பேர் உட்பட 710 பேரை போலீசார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மாற்றுப்பணியாளர்கள் மூலம் அங்கன்வாடிகள் திறக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை