போக்சோவில் ஒருவர் கைது
போடி; போடி அருகே சூலப்புரத்தை சேர்ந்த தேவர்சாமி 40. இவர் 8 மாதங்களுக்கு முன் 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதற்கு உடந்தையாக சிறுமியின் தாயார் எத்திலும்மா 49. தேவர் சாமியின் தந்தை சுருளியாண்டி, தாயார் ஜக்கம்மாள் இருந்துள்ளனர். போடி அனைத்து மகளிர் போலீசார் தேவர்சாமியை போக்சோவில் கைது செய்து, சுருளியாண்டி, ஜக்கம்மாள் உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.