உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 100 வயது வாக்காளர்களை சரிபார்க்க உத்தரவு

100 வயது வாக்காளர்களை சரிபார்க்க உத்தரவு

போடி : வாக்காளர் பட்டியலில் 100 வயது அதற்கு மேற்பட்ட வாக்காளர்களின் வயதினை உறுதி படுத்தும் வகையில் சரிபார்க்க அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. வாக்காளர் பட்டியலில் 100 வயது அதற்கு மேல் உள்ள வாக்காளர்களின் வயதினை உறுதி செய்திடவும், சரி பார்த்த பின் திருத்த நடவடிக்கை மேற்கொண்டு பட்டியலை தயாரிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனை ஒட்டி 100 வயது, அதற்கு மேற்பட்ட வயது உடைய வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் வயது, முகவரியை உறுதி செய்திடும் வகையில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை சரி பார்த்து உறுதி செய்யவும், இவர்களில் யாராவது இறந்து இருந்தால் அதனை உறுதிப் படுத்தும் வகையில் இறப்பு சான்று அல்லது உறவினர்கள், அருகே வசிக்கும் நபர்களிடம் படிவம் பெறுவதற்கான பணியில் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !