உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பதட்டமான ஓட்டுச்சாவடிகள் குறித்து அறிக்கை வழங்க உத்தரவு துப்பாக்கி பயன்படுத்துவோர் மீதும்   கண்காணிப்பு

 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் குறித்து அறிக்கை வழங்க உத்தரவு துப்பாக்கி பயன்படுத்துவோர் மீதும்   கண்காணிப்பு

தேனி: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பிரச்னைக்குரிய, பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து அறிக்கை அளிக்கவும், தேர்தல் அசம்பாவிதங்களை தவிர்க்க விதிமீறி துப்பாக்கிகள் பயன்படுத்துவோர் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸ் எஸ்.பி.,க்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை சுமூகமாக நடத்திட பிரச்னைக்குரிய, பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து அறிக்கை அளிக்க மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் மொத்தம் உள்ள வாக்காளர் எண்ணிக்கையில் 90 சதவீத ஓட்டுக்கள் பதிவாவது. மேலும் 75 சதவீதத்திற்கு மேல் ஒரே வேட்பாளர்களுக்கு ஓட்டுப்பதிவாவது அதிக பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடியாகும். ஓட்டுப்பதிவு 10 சதவீதம் மட்டுமே பதிவாகி இருந்தாலும் அதுவும் பதட்டமானவையாக கருதப்படும். பாதுகாப்பு அதிகாரிகளை மீறி தாக்குதலுக்கு உள்ளாகி, வாக்காளர்களை ஓட்டுப்பதிவு செய்ய விடாமல் அச்சுறுத்தும் சம்பவங்கள் நடந்தும், பின் நிலைமை சீரமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகள்,ஓட்டுப்பதிவுக்குச் சென்ற வாக்காளரின் ஓட்டை வேறொருவர் பதிவு செய்தல் போன்ற விபரம் கண்டறியப்பட்டு, அந்த ஓட்டுச்சாவடி விபரங்களையும் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை நாட்களில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க துப்பாக்கி, வேட்டை துப்பாக்கி, ரிவால்வார் உரிமம் உள்ளவர்களின் பட்டியலில் யார் யார் துப்பாக்கி பயன்படுத்துகின்றனர். உரிமையாளர் இறந்த பின்பும் விதிமீறி துப்பாக்கி பயன்படுத்தும் வாரிசுதார்கள் யார், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ