உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் மினி பார்களாக மாறும் கட்டண கழிப்பறைகள்

தேனியில் மினி பார்களாக மாறும் கட்டண கழிப்பறைகள்

தேனி: தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட கட்டண கழிப்பறைகள் செயல்படுகின்றன. இவற்றில் பீடி, சிகரெட் உடன் மதுபாட்டில்கள் விற்பனையும் ஜோராக நடக்கிறது.தேனி நகராட்சியில் இரு பஸ் ஸ்டாண்டுகள், பங்களாமேடு, பெரியகுளம் ரோடு, அல்லிநகரம், கருவேல்நாயக்கன்பட்டி என 10க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டண கழிப்பறைகள் செயல்படுகின்றன. இதில் பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தாலும், நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மற்ற பகுதிகளில் உள்ள கட்டண கழிப்பறைகள் பீடி, சிகரெட் விற்பனையுடன் மது விற்பனையும் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் 'மினி' டாஸ்மாக் ஆக மாறி வருகின்றன. இவற்றில் இரவு முழுவதும் மது விற்பனை ஜோராக நடக்கிறது. தேனி, அல்லிநகரம் போலீசார் வழக்குகள் பதிவு செய்தாலும், அனுமதியின்றி நடக்கும் சில்லரை மது வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தேனி தாலுகா அலுவலக பகுதி, பஸ் ஸ்டாண்ட்- கலெக்டர் அலுவலக ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் பெட்டிக்கடைகளிலும் சில்லரை வியாபாரம் களைகட்டுகிறது. அனுமதியின்றி நடைபெறும் சில்லரை மது விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி