தேசிய வேலை உறுதி திட்டத்தில் மோசடி ஊராட்சி உதவி செயலர் சஸ்பெண்ட்
மூணாறு: சின்னக்கானல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பண மோசடி செய்த உதவி செயலர் பனேஷ்கான் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.அந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மோசடி நடப்பதாக புகார் எழுந்தது. உள்ளாட்சிதுறை விஜிலன்ஸ் பிரிவினர் ஊராட்சியில் சோதனையிட்டனர். அதில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு மருந்து, காலணிகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அவற்றை வாங்குவதற்கு முறையாக டெண்டர் விடாமலும், வருடாந்திர திட்டத்தில் உட்படுத்தாமலும் வாங்கியதாகவும் தெரியவந்தது. தவிர அவற்றை நேரடியாக வாங்கியதாக கூறி போலி ரசீதுகள் வைக்கப்பட்டு ரூ. 1,98,900 மோசடி நடந்தது. அந்த மோசடியில் ஈடுபட்ட உதவி செயலாளராக பொறுப்பு வகித்த பனேஷ்கான் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.