ஊராட்சி அலுவலக கட்டட பூமி பூஜை
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முகசுந்தரபுரம் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் கட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றியச் செயலாளர் ராஜாராம், நகரச் செயலாளர் சரவணன், சண்முகசுந்தரபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரத்தினம், தி.மு.க., நிர்வாகி அய்யணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருமலாபுரம் ஊராட்சி பந்துவார்பட்டியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை அமைக்கவும் பூமி பூஜை நடந்தது.