பெரியகுளத்தில் இணைப்பு ரோடு சேதத்தால் அவதி
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் சுப்பையா தெரு முதல் 400 மீட்டர் தூரம் இணைப்பு ரோடாக சுதந்திரவீதி தெரு உள்ளது.மூன்றாந்தல் பகுதியில் இருந்து தண்டுப்பாளையம் சுற்றி செல்லவதால் நேர விரயமாகும். இதனால் ஏராளமான சைக்கிள்கள், டூவீலர்கள், ஆட்டோக்கள் சுப்பையா தெருவிலிருந்து சுதந்திரவீதி வழியாக வடகரை பழையபஸ்டாண்ட் பகுதிக்கு சென்றுவருகின்றனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள், மாணவிகள் இந்தப் பகுதி வழியாக பள்ளிக்கு செல்கின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் டூவீலர் டயர் பஞ்சராகிறது. நடந்து செல்பவர்கள் விழுந்து காயப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.-