சுருளி அருவியில் குளிக்க அனுமதி
கம்பம்: மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த ஜூன் 25 ல் மேகமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் ஜூன் 26 காலை முதல் அருவியில் குளிக்க தடை விதித்தனர். நேற்று முன்தினம் மாலை அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்து காணப்பட்டது. எனவே நேற்று காலை முதல் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. வேறு மாவட்டங்களில் இருந்து திரளாக சுற்றுலா பயணிகள் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.