உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எஸ்.பி.,யிடம் மனு

எஸ்.பி.,யிடம் மனு

தேனி:மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 98 கிராம மக்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். இந்நிலையில் மக்களை வெளியேற்ற முயற்சிப்பதை கண்டித்து கடமலைக்குண்டு புது பஸ் ஸ்டாண்டில் பரம்பரை வனவாசிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக எஸ்.பி.,யிடம் பாதுகாப்பு, அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. செப் 26., முதல் நீதி கிடைக்கும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !