உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனவிலங்கு வாரவிழாவில்  பிளாஸ்டிக் அகற்றம்

வனவிலங்கு வாரவிழாவில்  பிளாஸ்டிக் அகற்றம்

தேனி: தேனி வனச்சரகம், பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், உலக வனவிலங்கு வார விழா கொண்டாடப்பட்டது. பூதிப்புரம் சன்னாசியப்பன் கோயில் பகுதி, வனத்துறை காப்புக் காடுகளில் பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணி நடந்தது. தேனி ரேஞ்சர் சிவராம் தலைமை வகித்து, வனவிலங்கு வார விழாவின் முக்கியத்துவம், பிளாஸ்டிக், பாலிதீன் குப்பையால் வன உயிரினங்கள், வனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். தேனி வனச்சரக அலுவலர்களுடன், பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஜனனி தலைமையில் மாணவ, மாணவிகள் வனத்தையும் வன உயிரினங்களையும் காப்போம்' என, உறுதிமொழி எடுத்து பின், 500 கிலோ பிளாஸ்டிக் குப்பையை 20 சாக்குப் பைகளில் சேகரித்து வனத்தை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ