உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சத்து மாத்திரை சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி பலி

சத்து மாத்திரை சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி பலி

தேனி:தேனி மாவட்டம் சின்னமனுார் சாமிகுளத்தைச் சேர்ந்த கண்ணன் - உமாதேவி தம்பதி மகள் தக்ஷனாஸ்ரீ 16. தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அக்., 10ல் வயிற்று போக்கு ஏற்பட்டதால் சின்னமனுார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் வயிற்று போக்கு தொடர்ந்தது. தாயார் விபரம் கேட்டபோது வீட்டில் இருந்த ''போலிக் ஆசிட்'' சத்து மாத்திரைகளை விளையாட்டாக சாப்பிட்டு விட்டதாக கூறினார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்காக அவரை அக்., 12ல் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த தக்ஷனாஸ்ரீ இறந்தார். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமரன் கூறியதாவது: உடல்நிலை பாதிப்புடன் சத்துமாத்திரை சாப்பிட்டதால் மூளைப்பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. போலிக் ஆசிட் போன்ற சத்து மாத்திரைகளை டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ள கூடாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ