மேலும் செய்திகள்
மதுபாட்டில் பதுக்கி விற்ற இருவர் கைது
11-Mar-2025
தகராறு: எட்டு பேர் மீது வழக்கு தேனி: பொம்மையக் கவுண்டன்பட்டி முருகன். இவரது வீட்டில் 2024 நவ.12 சொத்துப் பிரச்னை தொடர்பாக, அதேபகுதி நவநீதகிருஷ்ணன் மகன் ஜெகன், அருண்குமார், முரளி ஆகியோர்,நவநீதகிருஷ்ணனின் மனைவி தனபாக்கியம் துாண்டுதலில் நான்கு நபர்கள் உட்பட 8 பேர் இணைந்து முருகன் வீட்டிற்குள் நுழைந்து தாக்கினர். இதில் முருகன் காயமடைந்தார். பீரோவில் இருந்தரூ.10 லட்சம் பணம், ஆதார் அட்டை, யுபிஐ., கார்டு எடுத்து சென்றனர். முருகனின் சகோதரி செல்வி புகாரில் அல்லிநகரம் எஸ்.ஐ., கண்ணன் தனபாக்கியம், ஜெகன், அருண்குமார், முரளி, மற்றும் அடையாளம் தெரியாத நால்வர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மதுபாட்டில் பதுக்கிய மூவர் கைதுதேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலானபோலீசார் ஆனைமலையான்பட்டி வாய்க்கால் அருகே ரோந்து சென்றனர். அப்போது மல்லிங்காபுரம்மந்தையம்மன் கோயில் தெரு அருண்குமார் 40, சட்டவிரோதமாக 28 மதுபாட்டில்களை விற்பனைக்காகபதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து, பாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., போத்திராஜ் தலைமையிலான போலீசார்கடமலைக்குண்டு டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றனர். கரட்டுப்பட்டிரோட்டை சேர்ந்த பால்பாண்டி 45, ரூ.4050 மதிப்புள்ள 27 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.தேனி: மதுரை உசிலம்பட்டி பாண்டியன் 39. இவர் கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி அருகே பெட்ரோல் பங்க் அருகே 26 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். இவரை கைது செய்த தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
11-Mar-2025