மேலும் செய்திகள்
தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: திணறும் போலீசார்
24-Sep-2025
பெயிண்டர் தற்கொலை தேனி: தேனி எம்.ஜி.ஆர்., நகர் அம்பேத்கர்தெரு கண்ணன் 57. பெயிண்டர். மனைவி காளீஸ்வரியை பிரிந்து 13 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். விரக்தியில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர். கொலை மிரட்டல்: தந்தை, மகன் மீது வழக்கு தேனி: பழனிசெட்டிபட்டி மருதுபாண்டியன் தெரு மாரிச்சாமி 38. சில மாதங்களுக்கு முன் செலவினங்களுக்காக கோடாங்கிபட்டி மூனுசாமி கோயில் தெரு ஈஸ்வரனிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றிருந்தார். பின் மீண்டும் கார் வாங்குவதற்காக அவரிடமே கடன் பெற்று, அந்த தொகைக்கான அசல், வட்டி செலுத்தினார். இருப்பினும் கூடுதல் தொகை வழங்க வலியுறுத்தி ஈஸ்வரன், அவரது மகன் அபூர்வன் ஆகிய இருவர் ஜாதியை கூறி இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மாரிச்சாமி புகாரில், ஈஸ்வரன், அபூர்வன் ஆகிய இருவர் மீது கொலை மிரட்டல், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Sep-2025