போலீஸ் செய்திகள்..
கல்லுாரி மாணவி மாயம் தேனி: பழனிசெட்டிபட்டி அண்ணா முதல் தெரு லெனின் 45. இவரது 19 வயது மகள் பெரியகுளம் தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நவ.7 காலை 8:30 மணிக்கு கல்லுாரி பஸ்சில் சென்ற மகள், மாலையில் வீடு திரும்ப வில்லை. தந்தை புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் மாணவியை தேடி வருகின்றனர். காரை கடத்தி சென்ற மர்மநபர் தேனி: தேனி க.விலக்கு அன்னை இந்திராநகர் வசந்த் 35. இவர் தனது ரூ. 2 லட்சம் மதிப்பிலான காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நவ. 9ல் மர்மநபர்கள் காரை திருடிச் சென்றனர். வசந்த் புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர். போலீசாருக்கு கார் காட்ரோடு அருகே ஓட்டிச் சென்ற வீடியோ பதிவு கிடைத்துள்ளதால் அதுகுறித்து விசாரித்து வருகின்றனர். மாட்டை துன்புறுத்திய வாலிபர் கைது தேனி: ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு சிங்கராஜபுரம் கர்ணன் 53. இவர் அதேப்பகுதியில் மாட்டு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். மாடுகள் திருடு போகாமல் இருக்க கொட்டகையில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தியுள்ளார். நவ. 8 ல் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது, கண்காணிப்பு கேமராக்களை காணவில்லை. பதிவுகளை ஆய்வு செய்த போது, சிங்கராஜபுரம் காளியம்மன் கோயில் ஜெகன்பாண்டி 22, என்ற வாலிபர் மாடுகளுடன் தகாத உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மாடுகளை துன்புறுத்தியது வீடியோவில் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராக்களை திருடி சென்றதும் பதிவாகி இருந்தது. கர்ணன் புகாரில் வருஷநாடு போலீசார், ஜெகன்பாண்டியை கைது செய்தனர்.