மேலும் செய்திகள்
வீர வணக்க நாள் போலீசார் அனுஷ்டிப்பு
1 hour(s) ago
தேனி: தேனி ஆயுதபடை மைதானத்தில் உள்ள நீத்தார் நினைவு ஸ்துாபிக்கு காவலர் நினைவு தின வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. பணியின் போது தங்களது இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு அக்.21ல் அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்கநாள் அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்றுஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்துாபிக்கு கையில் கருப்புப்பட்டை அணிந்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங், எஸ்.பி., சினேஹாப்ரியா மலர்வளையம் வைத்துமரியாதை செலுத்தினர். அதன்பின் ஏ.டி.எஸ்.பி.,க்கள் கலைக்கதிரவன், ஜெரால்டு அலெக்ஸ்சாண்டர், டி.ஸ்.பி.,க்கள் ராஜன், முத்துக்குமார், தேவராஜ், பெரியசாமி,ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் (வாகனப்பிரிவு) காளீஸ்வரன், எஸ்.பி., இன்ஸ்பெக்டர் சரவணன், பணியின் போது உயிர்நீத்த 3 போலீசாரின்குடும்ப வாரிசுகள் மலர் வளையம் வைத்து வைத்து அஞ்சலி செலுத்தினர். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் தலைமையில் 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின் கலெக்டர் கட்டுரை, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குசான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
1 hour(s) ago