உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எஸ்.பி., ஆபீசில் போலீஸ்காரர் மனைவி  தீக்குளிக்க முயற்சி

எஸ்.பி., ஆபீசில் போலீஸ்காரர் மனைவி  தீக்குளிக்க முயற்சி

தேனி: தேனி எஸ்.பி., அலுவலக நுழைவாயிலில் போலீஸ்காரர் பால்பாண்டி மனைவி அபிநயப்பிரியா, மகள் கவியாழினி, தாயார் செல்லத்தாய் ஆகிய மூவரும் குடும்ப பிரச்னை காரணமாக மண்ணெண்ணெய்யை உடலில்ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாண்டியன் நகர் பால்பாண்டி 38,தேனியில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி போடி மல்லிங்காபும் அபிநயப்பிரியா 34. ஆண்டிபட்டியில் வசித்தனர். 2020 மகள் பிறந்தார். ஓராண்டாக குடும்ப செலவிற்கு பணம் தராமல் தன்னையும், மகளையும் தாக்கி கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக நேற்று முன்தினம் போடி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் அபிநயப்பிரியா புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் ஆண்டிபட்டிஎன்பதால் புகார் வாங்க மறுத்துள்ளனர். இதனால் நேற்று மண்ணெண்ணெய் கேனுடன் எஸ்.பி., அலுவலக நுழைவாயில் அருகே தனது தாய்செல்லத்தாய், மகளுடன் வந்த அபிநயப்பிரியா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். பாதுகாப்பில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி மூவரையும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை