விதிமீறி தயாரித்த சிலைகள்: மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை
சின்னமனுார் : சின்னமனுாரில் வீதிதோறும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொது மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். நேற்று மாலை மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சுகுமார் தலைமையில் போலீசார் உதவியுடன், சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது 8 சிலைகள், 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' என்ற கெமிக்கல் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஆற்றிலோ நீர் நிலைகளிலோ கரைக்கக் கூடாது என்றும், ஊர்வலத்தில் கொண்டு செல்லக் கூடாது என்றும் அதிகாரிகள் கூறினர். ஆனால் ஊர்வலத்தில் எடுத்து செல்லவோ, ஆற்றில் கரைக்கவோ கூடாது என்று, எழுதி வாங்கி கொண்டு சென்றனர்.