பொருநை தமிழ் மன்ற முத்தமிழ் விழா
தேனி : தேனி தப்புக்குண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பொருநை தமிழ் மன்றத்தின் சார்பில், முத்தமிழ் விழா 'வாகை - 2025' என்ற தலைப்பில் நடந்தது. இளங்கலை இறுதியாண்டு மாணவி ஜெயசங்கரி வரவேற்றார். தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மேதை பொருநை தமிழ் மன்ற ஆண்டறிக்கையை சமர்பித்தார். முதல்வர் பொன்னுதுரை தலைமை வகித்து, உரை ஆற்றினார். துணைப் பதிவுத்துறை தலைவர் டாக்டர் ஆனந்த், வாகை 2025 மாணவர் இதழை வெளியிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரை ஆற்றினார். இளங்கலை கால்நடை மருத்துவ மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியாண்டு மாணவன் ஜெய்சூர்யா நன்றி தெரிவித்தார்.