மேலும் செய்திகள்
நவ., 1ல் கிராமசபை கேள்விக்குறி
21-Oct-2024
தேனி:தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1 நடக்க இருந்து கிராமசபை கூட்டத்தை ஒத்திவைத்து ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினம் ஜன.26, உலக தண்ணீர் தினம் மார்ச் 22, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆக.15, காந்தி ஜெயந்தி அக்.2, உள்ளாட்சிகள் தினம் நவ.1 என மொத்தம் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் மார்ச் 22, மே 1 கிராம சபை கூட்டங்கள் நடக்கவில்லை.இந்நிலையில் நவ.,1ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்கு மறுதினம் என்பதால் நவ.,1 விடுமுறையாக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கிராமசபை கூட்டத்தை ஒத்தி வைக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அரசை வலியுறுத்தினர். அதை ஏற்று கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைத்து, அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா அறிவித்துள்ளார்.
21-Oct-2024