உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

தேனி: மாநில அளவில்நடந்த கலைத்திருவிழாவில் முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு சென்னை விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. இரண்டாம், 3ம் பரிசு வென்ற மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் பரிசு, சான்றிதழ்கள் மாவட்டம் வாரியாக அனுப்பப்பட்டிருந்தது. தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சி.இ.ஓ., இந்திராணி பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். உதவி திட்ட அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். கிராமிய நடனம்(குழு), காகித கூழ் பொருட்கள் தயாரித்தல், பறை இசைத்தல், களிமண் சிற்பம் செய்தல் போட்டியில் இரு 2ம் இடம் என மொத்தம் 5 போட்டிகளில் 13 மாணவர்கள் 2ம் இடம் பிடித்தனர். கதை கூறுதல், மாறுவேடப்போட்டி, நகைச்சுவை வழங்குதல் உள்ளிட்ட 4 போட்டிகளில் 12 மாணவர்கள் 3ம் இடம் வென்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ