மேலும் செய்திகள்
1 கோடி விலைப்பேசப்பட்ட CSI Diocese பதவிகள்!
25-Oct-2024
கம்பம்: -தமிழகம் முழுவதும் 57 உதவி வேளாண் அலுவலர்களுக்கு உதவி விதை அலுவலர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.வேளாண் துறையில் உதவி வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள், உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், இயக்குனர், கூடுதல் இயக்குனர்கள் என்ற வரிசையில் பதவிகள் உள்ளன. குறிப்பிட்ட ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.உதவி வேளாண் அலுவலர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் வேளாண் கல்வியில் டிப்ளமோ முடித்தவர்கள். இவர்களிடம் பதவி உயர்வு என்பது மொத்தம் இரண்டு நிலைகளில் முடிந்து விடும்.நேரடியாக உதவி வேளாண் அலுவலர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் உதவி விதை அலுவலர்கள் (Aso அதற்கடுத்து துணை வேளாண் அலுவலர் பதவி உயர்வுடன் ஓய்வு பெறுவார்கள். வேளாண் அலுவலர் பதவி உயர்வு வேளாண் பட்டப்படிப்பு படித்திருந்தால் மட்டுமே கிடைக்கும். வேளாண் பட்டப்படிப்பு படித்தவர்கள் வேளாண் அலுவலர் முதல் இயக்குனர் வரை பதவி உயர்வு பெற முடியும்.தமிழகம் முழுவதும் வேளாண் துறையில் பணியாற்றும் 57 உதவி வேளாண் அலுவலர்களுக்கு உதவி விதை அலுவலர்கள் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சீனியாரிட்டிபடி இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஊதிய உயர்வு கிடைக்கும் என பதவி உயர்வு பெற்றவர்கள் தெரிவித்தனர்.
25-Oct-2024