உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 20 சதவீத போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்

20 சதவீத போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் அருணகிரி தலைமையில் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் காமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2021க்கு பின் ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் சரவணன், காளிப்பாண்டி, செல்லாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்செயல் விடுப்பு எடுத்ததால் சில சங்கங்களில் கடன் வழங்குதல், அலுவல் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி