உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி பஸ் ஸ்டாண்ட் அருகே அதிகரிக்கும் வழிப்பறி: புகார் அளிக்க தயங்கும் பொதுமக்கள்

தேனி பஸ் ஸ்டாண்ட் அருகே அதிகரிக்கும் வழிப்பறி: புகார் அளிக்க தயங்கும் பொதுமக்கள்

தேனி: தேனி புதுபஸ் ஸ்டாண்ட் அருகே சிவாஜிநகர் செல்லும் ரோட்டில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. அலைபேசி, பணத்தை இழப்போர் புகார் அளிக்க தயங்கும் நிலை அதிகரிக்கிறது. தேனி நகர் பகுதியில் உள்ள பலரும் சிவாஜிநகர் வழியாக வால்கரடு அருகே உள்ள ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்கின்றன. இந்த ரோட்டில் இரவில் போதிய மின் விளக்குகள் இல்லை. வனப்பகுதிக்குள் பலர் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்பகுதியில் போலீசார் வைத்திருந்த கேமராக்களும் திருடு போனது. இதனை சமூக விரோதிகள் சாதமாக பயன்படுத்தி மாலை, இரவில் அவ்வழியாக நடந்து செல்பவர்களிடம் மிரட்டி பணம், அலைபேசியை பறிப்பது அடிக்கடி நடக்கிறது. வழிப்பறி செய்து வனபகுதிக்குள் ஓடிவிடுகின்றனர். இதனால் பொருட்களை இழந்தவர்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதில் சிரமம் உள்ளது. இதனால் இரவில் பலரும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பங்களாமேடு சென்று வீடுகளுக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது. பொருட்களை இழந்தாலும் போலீசில் சிலர் புகார் கொடுப்பதில்லை. சமூக விரோத செயல்களை தடுக்க அப்பகுதியில் போதிய விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், போலீஸ் கண்காணிப்பை இப் பகுதியில் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி