உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜூலை 2 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

ஜூலை 2 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தேனி: மாவட்டத்தில் ஜூலை 2 முதல் 22 வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் ஒருலட்சம் பசுக்கள், 819 எருமை மாடுகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 53 கால்நடை மருந்தகங்கள், 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எந்த நாட்களில் முகாம் நடக்க உள்ளது என்பதை முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தவறாமல் கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம்களை பயன்படுத்தி கொள்ளவும், கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ