உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஓடை துார்வாராததால் மழைநீர் வீடுகளுக்குள் வரும் அவலம் ஏத்தக்கோவில் ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி அவதி

 ஓடை துார்வாராததால் மழைநீர் வீடுகளுக்குள் வரும் அவலம் ஏத்தக்கோவில் ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி அவதி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ஏத்தக்கோயில் ஊராட்சியில் பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்றி சிரமம் அடை கின்றனர். வசதிகளை மேம்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊராட்சியில் ஏத்தக்கோவில், சித்தயகவுண்டன்பட்டி ஆகிய இரு கிராமங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும் குழாய் இணைப்பில் கடைசியில் இருப்பதால் குடிநீர் முழு அளவில் கிடைப்பது இல்லை. நிலத்தடி நீரை அனைத்து தேவைகளுக்கும் பொதுமக்கள் பயன் படுத்துகின்றனர். சேதமடைந்த கழிவு நீர் வடிகால், பாலம் சீரமைக்க நடவடிக்கை இல்லை. கிராமத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கழிப்பிடத்திற்கு பூட்டு முத்தையா, ஏத்தக் கோவில்: கிராமத்திலிருந்து ஒண்டிவீரன் சுவாமி கோயில் செல்லும் ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இச்சி மரம் அருகே உள்ள சிறு பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக விவசாய பணிகளுக்கு வாகனங்கள் செல்லும்போது ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பெண்கள் பொது கழிப்பறை பரா மரிப்பின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். ஆண்கள், பெண் களுக்கு நவீன கழிப்பறைகள் கட்டுவதற்கு ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. பல மாதமாகியும் குடிநீர் வரவில்லை. 2 கி.மீட்டருக்கு ரோடு வசதி இல்லை ஜெயராம், ஏத்தக் கோவில்: கண்மாயில் இருந்து வாசிமலை கரடு வரை 2 கி.மீ.,தூரத்திற்கு தார் ரோடு அமைக்க தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ரோடு வசதி இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வாசிமலையான் கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் ரோடு வசதி அவசியம். கிராமத்தின் நடுவில் செல்லும் வெள்ளப்பாறை ஓடையை தூர் வார வேண்டும். தென்றல் நகர் அருகே ஓடையில் உள்ள பாலத்தில் குப்பை கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகள் எரியாததால் கிராமம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிப்புக்கு தோண்டப்பட்ட இடங்களை சரி செய்யாமல் விட்டுள்ளனர். பாலங்கள் சீரமைக்க வேண்டும் ரஞ்சித், ஏத்தக்கோவில்: ஊராட்சி அலுவலகத்தை அடுத்துள்ள இந்திரா நகர் குடியிருப்பு கல்கட்டு அருகே ஓடையில் ஏற்பட்ட மண் அரிப்பால் பாலம் சேதம் அடைந் துள்ளது. வெள்ளப்பாறை ஓடையில் மண், குப்பை அதிகமானதால் மழை நீர் திசை மாறி குடியிருப்புகளில் செல்கிறது. ஓடையில் குவிந்துள்ள குப்பையை அகற்றி தூர்வார வேண்டும். குடியிருப்பு அருகே சேதமடைந்த மூன்று பாலங்களையும் சரிசெய்ய ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தை முழுமைப்படுத்தி அனைத்து வீடுகளிலும் குடிநீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி