உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் வேலப்பர் கோயில் தெரு ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பம் வேலப்பர் கோயில் தெரு ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பம்: கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் நகராட்சி அதிகாரிகள் நேற்று ரோட்டோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். கம்பம் நகரில் பல வீதிகள் நடக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது. குறிப்பாக குட்டியா பிள்ளை தெரு, தேவாங்கர் தெரு, கிராமச் சாவடி தெரு, பாரதியார் நகர், காளவாசல் வீதிகள் உள்ளிட்ட பல வீதிகள் உள்ளன. நகரின் இதய பகுதியான வேலப்பர் கோயில் தெரு, காந்திஜி தெரு, வேலப்பர் கோயிலில் இருந்து வடக்கு செல்லும் தெரு, ஒடைக் கரை தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. நேற்று காலை கமிஷனர் உமாசங்கர், பொறியாளர் அய்யனார் தலைமையில் அதிகாரிகள் குழு , வேலப்பர் கோயில் தெரு ரோட்டை மறித்து பழக் கடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இந்த இடங்களில் மீண்டும் ஆக்கிரமிக்காதவாறு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை