உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அகற்றுங்கள் ஆறுகள், நீர் நிலைகளில் தேங்கிய மரம், செடி,கொடிகளை மழை பெய்தும் தண்ணீர் பயனில்லாமல் போகும் நிலை

அகற்றுங்கள் ஆறுகள், நீர் நிலைகளில் தேங்கிய மரம், செடி,கொடிகளை மழை பெய்தும் தண்ணீர் பயனில்லாமல் போகும் நிலை

பெரியகுளம்: மழை காலங்களில் மலைகள், காடுகளில் இருந்து அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள், செடி, கொடிகள்,ஆறுகள், கால்வாய்களில் தேங்குவதால் நீரின் போக்கு மாறி கண்மாய், குளங்களுக்கு நீர் செல்லாமல் வீணாகிறது. இதனால் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இன்றி பற்றாக்குறை நிலவுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், தடுப்பணை பகுதிகளில் வெள்ளம் அடிக்கடி கரைபுரண்டு ஓடுகிறது. முல்லை பெரியாறு, வைகை ஆறு, பெரியகுளம் வராகநதி, பாம்பாறு, கொட்டக்குடி ஆறு மற்றும் நீர் நிலைகளின் தண்ணீர் செல்கிறது. வெள்ளத்தில் போது மலைகள், வனப்பகுதிகளில் அடித்து வரப்படும் மரக்கழிவுகள், செடி, கொடிகள் பாலம், தடுப்பணை பகுதிகளில் தேங்கி நின்று நீரின் போக்கை மாற்றி விளை நிலங்களில் புகுந்து பெரும் சேதம் ஏற்படுகிறது. இதனால் கால்வாய் வழியாக கண்மாய்கள், ஊரணிகளுக்கு செல்ல வேண்டிய வெள்ளம் வீணாக ஆற்றில் ஓடி கலக்கின்றன. உதாரணமாக 50 அடி அகலமுள்ள வராநதியில் கடந்த வாரம் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மரக்கட்டைகள், செடி, கொடிகள் அடிந்து வரப்பட்டதால் நீர் தடைபட்டு ஜெயமங்கலம் பகுதிக்கு தண்ணீர் செல்வது பாதித்தது. இதில் கால்வாய்களில் ஆக்கிரமிப்பும் அதிகம் உள்ளதால் நீர் கண்மாய்களுக்கு செல்ல முடியாத நிலை உருவானது. நீர் வரத்து இல்லாததால் கண்மாய்கள் பல புதர்மண்டியும், கருவேலம் மரங்கள் வளர்ந்துள்ளன. ஆற்றை ஒட்டியுள்ள ஊர்களில் பலரும் கட்டட கழிவுகளை இரவில் வராகநதி ஆற்றில் கொட்டி செல்வதால் பல பகுதிகளில் குப்பை மேடாக மாறி வருகின்றன. மழைகாலத்திற்கு முன்பே நீர் நிலைகளை பராமரிப்பு செய்தால் தடையின்றி தண்ணீர் செல்லும். ஆறு, கால்வாய்கள் பராமரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நீர்ப்பாசனத் துறை கண்டு கொள்ளவில்லை. நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுbவார் மீது கடும் நடவடக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி, நீர் பாசனத்துறை நிர்வாகம் நீர் வழிப்பாதையில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதை உறுதி செய்வதை கண்காணிக்க வேண்டும் என்றனர். பாலம் பாதிக்கும் அபாயம் வராகநதி பாசன மண்டல பொறுபாளர் லட்சுமணன், மேல்மங்கலம்: பருவமழையாங் மழை நீர் வராகநதி ஆகாசஅய்யனார் பாலம் அருகே மரக்கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வராகநதியில் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீர்பானத்துறையிடம் தெரிவித்தும் அதனை அகற்ற நடவடிக்கை இல்லை. தொடர்ந்து மழை பெய்யும் போது பாலத்திற்கு மேலே தண்ணீர் செல்லும். இதனால் பாலம் பழமிலப்பதுடன், அந்த வழியாக போக்குவரத்து செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது என்றார். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை