ஜல்ஜீவன் 2.0 திட்டத்திற்குஅறிக்கை தயாரிப்பு பணி
தேனி:தேனி மாவட்டத்தில் ஜல்ஜீவன் 2.0 திட்டத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் பற்றி அறிக்கை தயாரிக்கும் பணியை ஊரக வளர்ச்சித்துறையினர் துவங்கி உள்ளனர். அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் இதுவரை சுமார் 1.85 லட்சம் குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். ஆனால், பல இடங்களில் இலவச திட்டம் என தவறாக கூறப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பங்களிப்புத்தொகை செலுத்த மறுக்கின்றனர். இதனால் குடிநீர் வழங்குவதில் சிரமம் நிலவுகிறது. தற்போது ஜல்ஜீவன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஊராட்சிகளில் விரிவாக்க பகுதிகளில் வழங்க வேண்டிய குடிநீர் இணைப்புகள், தேவையான மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவை பற்றி அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது என்றனர்.