உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்

கம்பம், : கடந்த சில நாட்களாக மாவட்டத்தில்பெய்தகனமழையால்முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.இதனால் முல்லைப் பெரியாற்றில் பம்பிங் செய்து விநியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கலாக உள்ளது.கம்பம் நகராட்சி தலைவர் வனிதா கூறுகையில் , மழை வெள்ளம் காரணமாக சுருளிப் பட்டி பம்பிங் ஸ்டேஷன் உறைகிணறு வெள்ளத்தில் முழ்கி உள்ளது.லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.கலங்கலான குடிநீராக இருப்பதால், பொதுமக்கள் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்பருகவேண்டும் என்றார்.பொதுச் சுகாதாரத் துறையும்இதனை வலியுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ