ரேஷனில் சர்வர் பிரச்னையை சரி செய்ய கோரி தீர்மானம்
தேனி: தேனியில் சி.ஐ.டி.யு., கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட கூட்டம் மாவட்ட செயல் தலைவர் பிச்சைமணி தலைமையில் நடந்தது. செயலாளர் செந்தில்காமு, பொருளாளர் கருப்பசாமி,மாவட்ட தலைவர் சண்முகம், கவுரவத்தலைவர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அரிசி எடை குறைவின்றி வழங்க வேண்டும், காலி சாக்குகளை தரம் பிரிக்காமல் அனைத்து சாக்குகளையும் கொள்முதல் செய்ய வேண்டும், பி.ஓ.எஸ்., மெஷின்களில் உள்ள சர்வர் பிரச்னையை 100 சதவீதம் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.