மேலும் செய்திகள்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
19-Sep-2025
தேனி: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் தேனி சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பெத்தணகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வம் நிர்வாகிகள் தனலட்சுமி, பொட்டியம்மாள், பாஸ்கரன், கணேசன், பரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறைப்படி வழங்க வேண்டும். தேனி மாவட்டத்திற்கு நிரந்தரமான சி.இ.ஓ., நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கோரிக்களை வலியுறுத்தி அக்.,15ல் சி.இ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
19-Sep-2025