ரோட்டோர கடைகள் உணவில் செயற்கை நிறமி அதிகம் கலப்பு
போடி: போடியில் ரோட்டோர கடைகள், ஓட்டல்களில் உணவு, திண்பண்டங்களில் செயற்கை நிறமி அதிகம் கலப்பதால் சாப்பிடும் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கும் நிலை உள்ளது. தமிழக, கேரளாவை இணைக்கும் வழித் தடத்தில் போடி உள்ளது. பூப்பாறை, நெடுங்கண்டம், மூணாறு செல்லக் கூடிய மக்கள் போடி வழியாக கேரளா செல்கின்றனர். இவர்கள் அதிகளவில் போடியில் உள்ள ஓட்டல்கள், ரோட்டோர கடைகளில் உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இரவில் செயல்படும் ஓட்டல், ரோட்டோர தள்ளு வண்டி கடைகளில் பாஸ்ட்புட் உணவை பலரும் சாப்பிட்டு செல்கின்றனர். ரோட்டோர கடைகள், ஓட்டல்களில் உள்ள உணவுகளில் செயற்கை நிறமி அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை வாங்கி சாப்பிடுவோர் உடல் உபாதையால் பாதிப்பு அடைகின்றனர். போடியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இருந்தும் சோதனையில் 'சுணக்கம் ' காட்டி வரு கின்றனர். போடியில் உள்ள ஓட்டல்கள், ரோட்டோர , பாஸ்ட் புட் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.