உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆர்.ஐ.,வீட்டில் திருடியவர் கைது

 ஆர்.ஐ.,வீட்டில் திருடியவர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் மகிமைபிரபு 38. பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ.,ஆக உள்ளார். இவரது மனைவி அகிலா 35, மகள் உள்ளனர். அலுவலக பணி சம்பந்தமாக ஆர்.ஐ., குள்ளப்புரம் சென்றிருந்தார். இவரது மனைவி பக்கத்து வீட்டில் பேசிவிட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் 39. முகத்தை மூடிக் கொண்டு வீட்டிற்குள் மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெங்கடேஷை பிடிக்க முயன்றனர். அப்போது வீட்டு மாடியில் கேமராவை சாக்குப்பையில் திருடியது தெரிந்தது. சுவர் ஏறி தப்பிக்க முயன்ற வெங்கடேஷ் கீழே விழுந்து காயமடைந்தார். மகிமை பிரபு புகாரில் தென்கரை போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ