மேலும் செய்திகள்
மூவருக்கு டெங்கு பாதிப்பு
13-Sep-2024
கம்பம்; தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் விவசாயி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.காமயகவுண்டன்பட்டி மங்கள காளியம்மன் கோயில் எதிரில் குடியிருப்பவர் முத்து சிங்கம் 72. மனைவி கூத்தனாட்சி. இவர்கள் மகன் செந்தில்குமாரை பார்க்க செப்.,15ல் வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரி சென்றனர். நேற்று காலை முத்து சிங்கம் ஊர்திரும்பிய போது வீட்டின் உள் கதவுகளை திறந்து பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் ரூ.15 லட்சம் கொள்ளை போயிருந்தது. ஆனால் அருகில் இருந்த பீரோவில் வைத்திருந்த பணம் ரூ.2.50 லட்சம் மற்றும் தங்க நகைகள் அப்படியே இருந்தன. புகாரின் பேரில் ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர். கைரேகை பதிவுகளை சேகரித்தனர்.
13-Sep-2024