உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீடு, கால்நடைகள் இழந்தவர்களுக்கு ரூ.23.09 லட்சம் நிவாரண நிதி

வீடு, கால்நடைகள் இழந்தவர்களுக்கு ரூ.23.09 லட்சம் நிவாரண நிதி

தேனி: மாவட்டத்தில் பெய்த கனமழையில் கடந்த 4 நாட்களில் 43 வீடுகள், 16,500 கோழிகள், 60 ஆடுகள் உயிரிழந்தன. இவற்றிற்கு அரசு சார்பில் ரூ. 23.09 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மாவட்டத்தில் அக்., 17, 18 ல் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உத்தமபாளையம் தாலுகா, போடி தாலுகாவில் பல பகுதிகளில் வெள்ளம் வயல்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது. சில இடங்களில் கால்நடைகளை வெள்ளம் அடித்து சென்றது. இதில் உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டது. கனமழை, வெள்ளத்தால் 5 வீடுகள் முழு சேதம், 38 வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. ஆடுகள் 60, பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 16,574 கோழிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. இவற்றிற்கு அரசு சார்பில் பகுதி சேதமடைந்த வீட்டிற்கு ரூ.4ஆயிரம், முழு சேதமடைந்த வீட்டிற்கு ரூ. 8ஆயிரம், இறந்த கோழிகளுக்கு தலா ரூ. 100, ஆடுகளுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப் படுகிறது. உத்தமபாளையம் தாலுகாவில் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.23.09 லட்சம் வழங்கப்பட உள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ