உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ரூ.60 ஆயிரம் பறிமுதல்

 ரூ.60 ஆயிரம் பறிமுதல்

உத்தம பாளையம்:உத்தம பாளையம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகில் பறக்கும் படை அதிகாரி செல்லக்குமார் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக நிலக்கோட்டை சந்தோஷபுரம் நாகராஜ் 33, ஓட்டி வந்த காரை சோதனை செய்தனர். காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.60 ஆயிரம் வைத்திருந்தார். அதனை பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ