மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
26-Aug-2025
கம்பம்: ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஊராட்சி செயலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், சுகாதார ஊக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளனர். ஆக., 23 ல் திருச்சியில் கோரிக்கை விளக்க மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் முடிவுகளின் படி கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 24 ல் மாவட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், அக். 29 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்தல், நவ . 24 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
26-Aug-2025