உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் ஸ்டேஷனில் பட்டாசு விற்பனை

போலீஸ் ஸ்டேஷனில் பட்டாசு விற்பனை

கம்பம்: போலீஸ் ஸ்டேஷன்களில் பசுமை பட்டாசு விற்பனை செய்ய கடந்தாண்டு அப்போதைய எஸ். பி. சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்தாண்டு பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர் உள்ளிட்ட பல போலீஸ் ஸ்டேஷன்களிலும் பட்டாசு விற்பனை நடந்தது. இந்தாண்டும் சின்னமனூர் போலீஸ் ஸ்டேஷனில் முன்புறம் தகர கொட்டகை அமைத்து ஆயுத படை போலீசார் பட்டாசு கடை திறந்துள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெளியில் உள்ள விலையை விட இங்கு விலை குறைவாக கிடைப்பதால் பொதுமக்கள்ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்,'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை