உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் நீர்நிலைகளில் மணல் திருட்டு தாராளம்

பெரியகுளத்தில் நீர்நிலைகளில் மணல் திருட்டு தாராளம்

தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகாவில் கண்மாய், ஆறுகளில் மணல் திருட்டு அமோகமாக நடந்து வருகிறது. தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி வேட்டுவன்குளம், மஞ்சளாறு, கெங்குவார்பட்டி மஞ்சளாறு நீர் வரத்து வாய்க்கால், வராகநதி, பாம்பாறு, செழும்பாறு கல்லாறு போன்ற ஆறுகளும், நூற்றுக்கணக்கான சிற்றோடைகள் செல்கின்றன. இதில் வரும் நீரை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் விவசாயம்நடக்கிறது. இப்பகுதிகளில் நடக்கும் மணல் கொள்ளையால் நீர் நிலைகளில் மணற்பாங்கு குறைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மணல் திருடர்களை கைது செய்ய தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், தென்கரை, வடகரை போலீசார் சுழற்சி முறையிலும், இவர்களுடன் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது 'ரெய்டு' நடக்கவில்லை. மீண்டும் திருட்டு இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகாலை 1:00 மணி முதல் 4:00 வரை மணல் கொள்ளை நடந்து வருகிறது. பெரியகுளம் தாலுகா பகுதிகளில் சில கட்டுமானங்களில் திருட்டு மணல் பயன்படுத்துகின்றனர். ஒரு டிராக்டர் மணல் ரூ.15 ஆயிரம், மாட்டு வண்டி ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது. ஓடைகளில் மணல் திருடி 20 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ.200 வீதம் டிராக்டரில் 100 மூடை முதல் 150 மூடை என ஏற்றி விற்கின்றனர். மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ